பண இரட்டிப்பு செய்வதாக பெண்ணிடம் மோசடி: 5 வருடங்கள் தலைமறைவாகியிருந்த மோசடி ஆசாமி கைது

0 1346
பண இரட்டிப்பு செய்வதாக பெண்ணிடம் மோசடி: 5 வருடங்கள் தலைமறைவாகியிருந்த மோசடி ஆசாமி கைது

சென்னை திருவான்மியூரில் பண இரட்டிப்பு செய்து தருவதாக பெண்ணிடம் மோசடி செய்து தலைமறைவாகியிருந்த ஆசாமியை 5 வருடங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு மதர்கீரின்லேண்ட் மூவி மேக்கர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த நிஜாமுதீன் என்பவன், பாலவாக்கத்தை சேர்ந்த ஷாநாஸ் பேகம் என்ற பெண்ணிடம், பட தயாரிப்புக்கு பணம் தேவைப்படுவதாகவும், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் 15 நாட்களில் இரட்டிப்பாக திரும்பி தந்து விடுவதாக கூறி நம்ப வைத்து, பணம் நகையை வாங்கி கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 26சவரன் தங்க நகை மற்றும் 7 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாந்த ஷாநாஸ் பேகம், அளித்த புகாரின் பேரில், அவனை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments