மும்பையில் அனைவருக்குமான புறநகர் ரயில்களை இயக்குவது குறித்து மகாராஷ்டிர அரசிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை - அமைச்சர் பியூஷ் கோயல்

0 1014
மும்பையில் அனைத்து தரப்பினரும் பயணம் செய்யும் வகையில் புறநகர் ரயில்களை இயக்குவது குறித்து மகாராஷ்டிர அரசிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மும்பையில் மருத்துவம், மின்சாரம், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட இன்றியமையாப் பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்காக மட்டும் ஜூன் 15 முதல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கும், மக்களுக்கும் இவற்றில் அனுமதியில்லை என்பதால் பணியிடங்களுக்குச் செல்வதற்குப் பெரிதும் இன்னலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில் அனைவருக்குமான புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது. எனினும் இது குறித்து மாநில அரசிடம் இருந்து முறைப்படியான கோரிக்கை வரவில்லை என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments