திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரில், பிக்பாஸ் தர்ஷனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு

0 9375
காதலித்து நிச்சயம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக நடிகை சனம் செட்டி அளித்த புகாரில் பிக்பாஸ் தர்ஷனுக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

காதலித்து நிச்சயம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக நடிகை சனம் செட்டி அளித்த புகாரில் பிக்பாஸ் தர்ஷனுக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தர்சனுக்காக 2 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும், காதலித்து நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகவும், அவதூறு பரப்பியதாகவும் ஷனம் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

பிறகு தர்ஷன் மீது அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல், மோசடி செய்தல், பெண்ணை மானபங்கப்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு, இலங்கை நாட்சை சேர்ந்த நடிகர் தர்ஷனுக்கு சென்னை வீட்டு முகவரிக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments