ஹத்ராஸ் சம்பவத்தில் யோகி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சர்வதேச சதி : உ. பி போலீசார் முதல்நிலை தகவல் அறிக்கை

0 6629
ஹத்ராஸ் சம்பவத்தில் போலீசார் புதிதாக பதிவு செய்துள்ள முதல்நிலை தகவல் அறிக்கையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்த சர்வதேச சதி நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதி ரீதியிலான கலவரங்களை ஏற்படுத்தவும், யோகி ஆதித்யநாத் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும் சர்வதேச அளவில் சதி நடந்திருப்பதை கண்டுபிடித்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இணையதளம் ஒன்றில் எப்படி பாதுகாப்பாக போராட்டம் நடத்துவது, போலீசாரை எப்படி தவிர்ப்பது, கலவரத்தின்போது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு துப்பாக்கியால் சுட்டால் என்ன செய்வது போன்ற தகவல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments