இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் 3வது நாளாக ஏற்றம்
இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 3வது தினமாக வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 566 புள்ளிகள் வரை உயர்ந்த பின் சற்று இறங்கியது.
இறுதியில் 276 புள்ளிகள் உயர்ந்து 38 ஆயிரத்து 973 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 86 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 503ல் நிலை கொண்டது.
தகவல் தொழில்நுட்பம், உலோகம், மருந்து நிறுவன பங்குகள் விலை உயர்ந்தது சந்தையின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது.
பங்குகளை திரும்ப வாங்க பரிசீலிப்பதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்தன் எதிரொலியாக அதன் பங்குகள் ஒரே நாளில் 7 சதவீதத்திற்கு மேல் உயர்ந்ததால், 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மூலதனம் கொண்ட இரண்டாவது இந்திய நிறுவனமாக உயர்ந்துள்ளது.
Comments