கொரோனா அச்சுறுத்தலால், பொதுப்போக்குவரத்தை தவிர்த்து சைக்கிளில் பயணிக்கும் ஐரோப்பியர்கள்
கொரோனா அச்சுறுத்தலால், மக்கள் பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றை தவிர்த்து, சைக்கிள்களில் பயணிக்கத்துவங்கியதால் போர்ச்சுகலில் சைக்கிள் விற்பனை கலை கட்டியுள்ளது.
ஐரோப்பாவில், சைக்கிள் தயாரிப்பில் முன்னனி வகிக்கும் போர்ச்சுகலில், ஊரடங்கால், 40 சைக்கிள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 8000 பேரின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டது.
தற்போது, பல்வேறு நாடுகளில் இருந்து சைக்கிள்களுக்கான ஆர்டர்கள் இரட்டிபாகக் குவியத் துவங்கியதால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Comments