கூகுள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு எதிராக கூட்டு சேரும் இந்திய நிறுவனங்கள்

0 5431
கூகுள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை தடுக்கும் விதத்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து செயல்பட திட்டமிட்டுள்ளன.

கூகுள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை தடுக்கும் விதத்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து செயல்பட திட்டமிட்டுள்ளன.

அண்மையில் பேடிஎம் ஆப், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் பிளே ஸ்டோரில் இடம்பெறும் கட்டணம் வசூலிக்கும் ஆப்களுக்கு 30 சதவீத கமிசன் தர வேண்டும் என்ற கூகுளின் முடிவுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த சனிக்கிழமை நடத்திய கூட்டத்தில், கூகுளின் ஏகபோக கொள்கைக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன.

பேடிஎம், இந்தியா மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்களை ஒருங்கிணைத்து புதிய அமைப்பை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments