சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 10 லிருந்து 36ஆக உயர்வு
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 10 லிருந்து 36ஆக உயர்ந்துள்ளது.
ஒரே தெருவில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என மாநகராட்சி அறிவித்திருந்த நிலையில், தொற்று எண்ணிக்கை அதிகரிப்பின் விளைவாக, ஞாயிறு வரை 10ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை திங்கள் ஒரே நாளில் 36ஆக உயர்ந்துள்ளது.
அதிகப்படியாக அம்பத்தூர் மண்டலத்தில் 16 பகுதிகளும், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் தலா 4 பகுதிகளும், திரு.வி.க. நகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் தலா மூன்று பகுதிகளும் உள்ளன.
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 10 லிருந்து 36ஆக உயர்வு #Chennai | #CoronaVirus | #CoronaContainmentZone https://t.co/Tz2uUJZMUE
— Polimer News (@polimernews) October 5, 2020
Comments