ரபேல் மூலம் எதிரி நாட்டின் மீது முதல் தாக்குதல் நடத்தும் திறன் விமானப்படைக்கு கிடைத்துள்ளது - விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா
ரபேல் சேர்க்கப்பட்டதன் மூலம் எதிரி நாட்டின் மீது இந்திய விமானப்படைக்கு முதலாவதாக தாக்குதல் நடத்தும் திறனும், ஊடுருவி தாக்குதல் நடத்தும் திறனும் கிடைத்திருப்பதாக விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.
வரும் 8ம் தேதி விமானப்படை தின அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இந்த அணிவகுப்பில் ரபேல் விமானம் உள்ளிட்ட 56 போர் விமானங்கள் கொண்டு வரப்படவுள்ளன.
இந்நிலையில் விமானப்படை தளபதி பதோரியா அளித்த பேட்டியில் இந்திய விமானப்படை தற்போது ரபேல் போர் விமானங்கள், அதிநவீன அபாச்சி மற்றும் சினுகுக் ஹெலிகாப்டர்களை இயக்கி வருவதாக கூறினார்.
மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக வாங்கப்படவுள்ள மிக்-29 விமானங்களுடன் சேர்த்து ரபேல் மற்றும் எல்சிஏ மார்க் 1 விமானப்படை பிரிவுகள் முழு பலத்துடன் செயல்படுவதை காணலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments