டோக்கியோ பங்குச்சந்தையில் கணினி வன்பொருள் கோளாறால் பாதிப்பு
ஜப்பானின் டோக்கியோ பங்குச்சந்தையில் வணிகத்தைக் கையாளும் கணினியில் ஒரு வன்பொருள் செயல்படாமல் போனதால் ஒரு நாள் சந்தை மூடப்பட்டதுடன் அன்றைய வணிகம் பாதிக்கப்பட்டது.
டோக்கியோ பங்குச்சந்தை உலகின் மூன்றாவது பெரிய பங்குச்சந்தையாகும்.
இதில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்தப் பங்கு மூலதனம் இந்திய மதிப்பில் 440 லட்சம் கோடி ரூபாயாகும்.
கடந்த வியாழனன்று இந்தப் பங்குச்சந்தையின் வணிக ஆர்டர்களைச் செயலாக்கும் கணினியில் ஒரு வன்பொருள் செயல்டாமல் போனது.
இதைச் சரிசெய்ய அலுவலர்கள் முயற்சி மேற்கொண்டும் பயனில்லை.
அன்று முழுவதும் பங்குச்சந்தை மூடப்பட்டதால் பங்கு விற்பனை பாதிக்கப்பட்டது.
Comments