நியூயார்க்கில் மீண்டும் அமலுக்கு வர உள்ள கொரோனா ஊரடங்கு: கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளதால் நடவடிக்கை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் வரும் 7 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மேயர் அறிவித்துள்ளார்.
நகரின் 9 இடங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் அத்தியாவசியமற்ற வணிக நிறுவனங்கள், பள்ளிகளை மூட உள்ளதாகவும், ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும் மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் குளிர்காலத்தில் நோய் பரவல் தீவிரமடைவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
This was not an easy choice to make, and let me be clear: we haven’t seen any issues in these schools. We must, however, be proactive about the safety and health of New Yorkers.
— Mayor Bill de Blasio (@NYCMayor) October 4, 2020
Comments