பவானியில் பிசியான சாலையை பார் ஆக மாற்றி மது பிரியர் ஆட்டூழியம்!

0 3831

பவானி புதிய பேருந்து நிலையம் அருகே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில், நடுரோட்டில் அமர்ந்து மது அருந்தியவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு மது பிரியர்கள் அட்டூழியத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் பவானி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மேட்டூர் செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. இந்த சாலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணயளவில் மது பிரியர் ஒருவர் சாலையின் நடுவே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். மழையும் பெய்து கொண்டிருந்தது.

ஆனால், வாகன ஓட்டிகள் யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு கையில் பாட்டில் மற்றோரு கையில் கிளாஸ் என்று நடுரோட்டில் அவர் சியர்ஸ் செய்து கொண்டிருந்தார். சுமார் 10 நிமிடங்கள் சாலையிலேயே அமர்ந்து மது அருந்தினார். இதனால், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டாலும் யாருக்கும் அவரைத் தட்டி கேட்க தைரியம் வரவில்லை.

யாராவது அவரிடம் பேசினால், 'அடித்து விடுவேன்' என்று வேறு மது பிரியர் எச்சரித்துக் கொண்டிருந்தார். தான் வாங்கி வந்த மது பாட்டில் காலியான பிறகே அந்த இடத்தை விட்டு அவர் நகர்ந்தார்.

தற்போது, மது பிரியர் சாலையில் மது அருந்தும் வீடியோக காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments