கொல்கத்தாவில் கிழக்கு- மேற்கு பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் சேவை: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

0 11677
கொல்கத்தாவில் கிழக்கு- மேற்கு பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் சேவை: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

கொல்கத்தாவில் துர்கா பூஜைக்கான திருவிழாக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்களின் வசதிக்காக  ஃபூல் பாகன் மெட்ரோ ரயில் நிலையத்தை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி மூலம் திறந்துவைத்தார்.

சால்ட் லேக் ஸ்டேடியத்தில் இருந்து சால்ட் லேக் செக்டர் 5 வரையிலான வழித்தடத்தில் நகரின் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் மெட்ரோ சேவை விரிவாக்கத்துக்கு இந்த ரயில் நிலையம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சாலை வழியாக சென்றால் ஒரு மணி நேரத்துக்கு மேலாகும்.

ஆனால் மெட்ரோ மூலம் இந்த தூரத்தை 16 நிமிடங்களில் கடந்து செல்ல முடியும் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments