பிரான்சில் இருந்து நியூ கலிடோனியா தனி நாடாக பிரிந்து போக விரும்பவில்லை என மக்கள் வாக்களிப்பு
பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக நியூ கலிடோனியா மாறுவதை அப்பகுதி மக்கள் விரும்பவில்லை என்பது வாக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
பாரிஸில் இருந்து 16 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நியூ கலிடோனியா தீவுக்கூட்டத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென 30 ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நியூ கலிடோனியா தனி நாடாக வேண்டுமா அல்லது பிரான்ஸின் அங்கமாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.
இதில் 53.26 சதவீத மக்கள் பிரான்சுடன் தான் நியூ கலிடோனியா இருக்க வேண்டுமென வாக்களித்தனர்.
Partial results show New Caledonia rejects independence from France https://t.co/0xISmxnGqW pic.twitter.com/2UGHQeRRIQ
— FRANCE 24 (@FRANCE24) October 4, 2020
Comments