'சிறிது வெந்நீர் ஊற்றினால் 61 கிராம் பொங்கல் 230 கிராமாக மாறும்' - தென்னக ரயில்வே விளக்கம்

0 110800

பொதுவாகவே, ரயில்களில் வழங்கப்படும் உணவு பொருள்கள் தரமாக இருப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. ரயில்களில் விற்கப்படும் உணவில் அளவு குறைவாக இருக்கும்.சுவையாகவும் தரமாகவும் இருக்காது. சில சமயங்களில் பல்லி போன்றவை கூட ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொட்டலங்களில் கிடப்பதாக சர்ச்சை எழுவதும் உண்டு.

திருச்சியிலிருந்து சென்னைக்கு நேற்று முன்தினம்  சென்ற பல்லவன் ரயிலில்  பயணி ஒருவர் பொங்கல் வாங்கியுள்ளார். ஆனால், அந்த பொங்கல் வெறும் 50 கிராம் அளவே இருந்ததாக புகார் எழுந்தது. மேலும், ‘இந்த பொங்கலை 8 மாதங்கள் வரை சாப்பிட முடியும் என்று அதில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்து கோபமடைந்த அந்த பயணி ,ரயில்களில் உணவு தயாரித்து விற்பனை செய்ய காண்டிரக்டர்களை திட்டிய வீடியோ நேற்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து, தென்னக ரயில்வே அளித்துள்ள விளக்கத்தில், ''ஐ.ஆர்.சி.டி.சி அனுமதி பெற்ற உணவு நிறுவனங்கள் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பாதுகாப்பான முறையில் தயாரித்து வழங்கப்படுகிறது. அதன்படி, 61 கிராம் பொங்கல் விற்கப்படுகிறது. இந்த உணவுகளை உட்கொள்ள வேண்டிய வழிமுறைகளும் பார்சல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பார்சல் செய்யப்பட்டு கொடுக்கப்பட்ட உணவில் சிறிது வெந்நீர் ஊற்றி 8 நிமிடம் கழித்து பார்த்தால் பொங்கல் 220 முதல் 230 கிராம் பொங்கலாக மாறியிருக்கும் '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments