டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு இன்று விசாரணை
2ஜி வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தினமும் விசாரணை நடைபெறவுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கத்துறை வழக்கு தொடுத்தது.
இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டன.
அதனை ஏற்று கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை இன்று பிற்பகல் தொடங்குகிறது.
முதலில் சி.பி.ஐ. மேல்முறையீடு வழக்கில் விசாரணை நடைபெறுகிறது.
Comments