ஐபிஎல்: 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி

0 4367
ஐபிஎல்: 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

அதிகபட்சமாக கே.எல் ராகுல் 63 ரன்களை குவிக்க, அதிரடியாக ஆடிய பூரான் 33 ரன்களை சேர்த்தார்.

இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை குவித்தது.

இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான வாட்சன், டூபிளசி இருவரும், பஞ்சாபின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

டூபிளசிஸ் 87 ரன்களும், வாட்சன் 83 ரன்களும் குவிக்க 17.4 ஓவர்கள் முடிவில், சென்னை அணி இலக்கை எட்டி தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments