ரயில் பயணிகளுக்கு இந்தியில் எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக எழுந்த புகாருக்கு, தெற்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு
தமிழ்நாட்டில் இருந்து முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் ரயில் பயணிகளுக்கு இந்தியில் S.M.S அனுப்புவதாக எழுந்த புகாருக்கு, தெற்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தி S.M.S விவகாரத்தில் I.R.C.T.C - யின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக M.P.க்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம், எல்லா பயணிகளுக்கும் இந்தியில் S.M.S அனுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளது.
சுய விவரம் என்ற தலைப்பில் விருப்ப மொழியை தேர்வு செய்யும் இடத்தில் பயணி ஒருவர், இந்தி மொழியை தேர்வு செய்திருந்தார் என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இதுவே, கணினி உருவாக்கிய செய்தி இந்தியில் அனுப்பப்பட்டதற்கு காரணம் என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
எனவே, இ-டிக்கெட்டு களை முன்பதிவு செய்யும் பயணிகள் தங்கள் சுயவிவரத்தை I.R.C.T.C இணைய தளத்தில் பதிவு செய் யும் போது சரியான மொழி விருப்பத்தை தேர்வு செய்யு மாறு, தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
Comments