ஹத்ராஸ் சம்பவத்தில் இளம்பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் - தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தகவல்

0 4848
ஹத்ராஸ் சம்பவத்தில் இளம்பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் - தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தகவல்

ஹத்ராஸ் பாலியல்-கொலை வழக்கில், இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவரது அடையாளத்தை வெளியிட்டதற்காக, நடிகை  ஸ்வரா  பாஸ்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய், பாஜக IT பிரிவு தலைவர் அமித் மாளவியா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இளம்பெண்ணின் உடற்கூறு அறிக்கையில், பாலியல் வன்புணர்வு குறித்து தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ள  தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, அது குறித்த தெளிவான விளக்கம் வந்த பிறகு, இவர்களுடன், சமூகவலைதளங்களில் இளம்பெண்ணின் படங்களை வெளியிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments