10 ஆண்டுகளுக்கு மேலாக, டாக்சி ஓட்டி கணவனின் துணையின்றி இரு குழந்தைகளை வளர்க்கும் பட்டதாரிப் பெண்
மேற்கு ஆசிய நாடான சிரியாவில், பெண் ஒருவர் வாடகை டாக்சி ஓட்டி பொதுமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.
பட்டதாரிப் பெண்ணான கினானா அல் புன்னி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக, சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு டாக்சி ஓட்டி வருகிறார்.
கொரோனா ஊரடங்கால் எல்லைகள் மூடப்பட்டதால், உள்ளூரில் டாக்சி ஓட்டும் அவர், பெண்களால் டாக்சி டிரைவராக வாகனம் ஓட்ட முடியாது என சிலர் நம்புவதை பொய்யாக்கவே டாக்சி ஓட்டுவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஈட்டப்படும் வருவாயில், தன் இரு குழந்தைகளையும், கணவன் துணையின்றி அவர் வளர்த்து வருகிறார்.
Comments