சீனாவில் தேசிய தின விடுமுறையையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் களைகட்டியது!
சீனாவில் தேசிய தின விடுமுறையையொட்டி, நாடு முழுவதும் கண்கவர் ஒளி நிகழ்ச்சிகள், வேடிக்கை விளையாட்டுகள், நாட்டுப்புற நிகழ்வுகள் களைகட்டியது.
ஜியாங்சி மாகாணத்தில் உள்ள ஷாங்க்ராவ் நகரில், சுமார் 20 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம் கொண்ட கலைடாஸ்கோப் வடிவ 3டி சுரங்கம், பார்வையாளர்களை ஈர்த்தது.
வுயுவான் நகரில் பாரம்பரிய உடைகளை அணிந்து பழங்கால விளையாட்டுகள், போட்டிகளில் பொதுமக்கள் பங்கேற்றனர்.
மேலும், தலைநகர் பெய்ஜிங்கில், நவீன பொழுதுபோக்கு நடவடிக்கைகள் பல அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டோங்ஜோ மாவட்டத்தில் கால்வாய்யை மையமாக கொண்டு நடந்த ஒளி நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
Comments