ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா தள்ளிவிடப்பட்ட சம்பவத்திற்கு உத்தர பிரதேச காவல்துறை மன்னிப்பு கேட்டுள்ளது

0 3404
ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா தள்ளிவிடப்பட்ட சம்பவத்திற்கு உத்தர பிரதேச காவல்துறை மன்னிப்பு கேட்டுள்ளது

ஹத்ராஸ் செல்ல முயன்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தள்ளி விடப்பட்ட சம்பவத்திற்கு உத்தர பிரதேச காவல்துறை மன்னிப்பு கேட்டுள்ளது.

ஹத்ராசில் தலித் இளம்பெண்ணின் பாலியல் கொலையை தொடர்ந்து,அவரது குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல், பிரியங்கா தலைமையிலான காங்கிரஸ் குழுவினரை யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் போலீசார் தடுத்த போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இரண்டு பேரும் சாலையின் நடுவில் உள்ள மீடியனில் தரையில் விழுந்தனர்.

பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய இந்த நிகழ்வுக்கு 24 மணி நேரத்திற்குப் பிறகு மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. தள்ளிவிடப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கும் உத்தர பிரதேச காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments