ஹத்ராசில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணின் உடலில் பலாத்காரம் செய்ததற்கான அடையாளங்கள்- சட்டப் புலனாய்வு அறிக்கை
ஹத்ராசில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணின் உடலில் பலாத்காரம் செய்ததற்கான அடையாளங்கள் இருந்ததாக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத் தடயவியல் வல்லுநர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஹத்ராசில் வயலுக்குச் சென்றபோது 4 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் குற்றுயிராக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.
நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்த அவர், பின்னர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்குச் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக அலிகார் மருத்துவ வல்லுநர்கள் தயாரித்துள்ள மருத்துவ - சட்டப் புலனாய்வு அறிக்கையில், பலாத்காரம் செய்ததற்கான அடையாளங்கள் அந்தப் பெண்ணின் உடலில் காணப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பெண் உயிருடன் இருந்தபோது கொடுத்த வாக்குமூலத்தில் சந்தீப், ராமு, லவகுஷ், ரவி ஆகிய 4 பேர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments