50 கிராம் பொங்கல் 80 ரூபாய்... 8 மாசத்துக்கு பயன்படுத்தலாம்... கொதித்து போன ரயில் பயணி!
ரயிலில் 80 ரூபாய் கொடுத்து, 50 கிராம் பொங்கல் வாங்கினால் கோபம்தானே வரும்... தன் ஆத்திரத்தை ரயில் பயணி ஒருவர் ஊழியரிடத்தில் கொட்டி தீர்க்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
பொதுவாகவே, ரயில்களில் வழங்கப்படும் உணவு பொருள்கள் தரமாக இருப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. ரயில்களில் விற்கப்படும் உணவில் அளவு குறைவாக இருக்கும்.
சுவையாகவும் தரமாகவும் இருக்காது. சில சமயங்களில் பல்லி போன்றவை கூட ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொட்டலங்களில் கிடப்பதாக சர்ச்சை எழுவதும் உண்டு. அதே போல, பல்லவன் ரயிலில் பயணி ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட உணவின் அளவு குறைவாக இருப்பதை கண்டு கொந்தளித்தே போனார்.
திருச்சியிலிருந்து சென்னைக்கு சென்ற பல்லவன் ரயிலில் நேற்று பயணி ஒருவர் பொங்கல் வாங்கியுள்ளார். ஆனால், அந்த பொங்கல் வெறும் 50 கிராம் அளவே இருந்துள்ளது.
மேலும், ‘இந்த பொங்கலை 8 மாதங்கள் வரை சாப்பிட முடியும் என்று அதில் எக்பைரி டேட் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்து கோபமடைந்த அந்த பயணி தன்னிடம் பொங்கல் டெலிவரி செய்தவர்களை திட்டவில்லை.
அந்த ஊழியர்களை கண்ணியத்துடன் நடத்திய அவர் ,ரயில்களில் உணவு தயாரித்து விற்பனை செய்ய காண்டிரக்டர்களை வெளுத்து வாங்கினார்.
Comments