மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை

0 1213
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதுகுறித்து ட்விட்டரில் ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் வெளியிட்டுள்ள பதிவில், நேற்றிரவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.

தேவைப்பட்டால் விரைவில் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இன்னொரு அறுவை சிகிச்சை செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ராம்விலாஸ் பாஸ்வானுக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையால், பீகார் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க நேற்று நடைபெறவிருந்த லோக் ஜனசக்தி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments