கொரோனா சூழலில் கடன் தவணைகளை முறையாகத் திருப்பிச் செலுத்தியோருக்கு ஈட்டுத்தொகை வழங்க அரசு ஆய்வு
கொரோனா சூழலில் கடன் தவணைகளை முறையாகத் திருப்பிச் செலுத்தியோருக்கு ஈட்டுத்தொகை வழங்குவது பற்றி அரசு ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடன் தவணை திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைத்த காலத்துக்கு வட்டிக்கு வட்டி கணக்கிடக் கூடாது எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட கடன்களுக்கு வட்டிக்கு வட்டி பெறப்படாது என உறுதியளித்தது.
இந்நிலையில் தள்ளி வைப்பைத் தேர்ந்தெடுக்காமல் முறையே கடனைத் திருப்பிச் செலுத்தியோருக்கு அதற்கான ஈட்டுத் தொகையை வழங்குவதே சமநிலையாக இருக்கும் என்னும் கருத்து எழுந்துள்ளது.
இத்தகையோருக்குத் தவணைகளின் எண்ணிக்கையில் குறைக்கலாமா, அல்லது தவணைத் தொகையில் குறைக்கலாமா, தொகையைத் திருப்பி வழங்கலாமா என்பது பற்றி மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
Comments