அமெரிக்காவில் உள்ள விளையாட்டு அரங்குகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

0 1186
அமெரிக்காவில் உள்ள விளையாட்டு அரங்குகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

அமெரிக்காவில் விளையாட்டு அரங்குகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

அட்லாண்டாவில் உள்ள மெர்சிஸிடிஸ் பென்ஸ் மைதானத்தில் பல்வேறு போட்டிகள் நடப்பது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக இந்த மைதானம் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு மீண்டும் போட்டிகள் நடப்பதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சாதாரணமாக கிருமி நாசினி தெளிப்பதை விட ட்ரோன்கள் மூலம் தெளிப்பது நேரத்தை 95 விழுக்காடு வரை மிச்சப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில் தற்போது விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments