ஐ.பி.எல் : 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்து டெல்லி அணி வெற்றி

0 1461
ஐ.பி.எல் : 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்து டெல்லி அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.

சார்ஜாவில் நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 88 ரன்கள் குவித்தார்.

229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது.

கடைசி ஓவரில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 26 ரன் தேவைப்பட்ட நிலையில் அந்த அணியால் 8 ரன்களே எடுக்க முடிந்தது. டெல்லி 18 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்தது மட்டுமின்றி புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments