நேபாள நாட்டு பிரதமரின் முதன்மை செயலாளர் உள்பட 5 பேருக்கு கொரோனா

0 1006
நேபாள நாட்டு பிரதமரின் முதன்மை செயலாளர் உள்பட 5 பேருக்கு கொரோனா

நேபாள நாட்டு பிரதமர் சர்மா ஒலியின் முதன்மை செயலாளர் உள்பட செயலகத்தில் பணியாற்றி வரும் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமரின் அரசியல் ஆலோசகர் பிஷ்னு ரீமல், ஊடக ஆலோசகர் சூர்யா தபா, வெளிவிவகார ஆலோசகர் டாக்டர் ராஜன் பட்டாராய் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதவிர்த்து பிரதமரின் முதன்மை செயலாளர் இந்திரா பண்டாரி, செயலகத்தின் புகைப்படக்காரர் ராஜன் காப்ளே ஆகிய 2 அதிகாரிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும் நேபாள பிரதமரின் நிலை என்ன என்பது பற்றி தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments