இந்தியா அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தாது என்று ஐநா.சபையில் உறுதி
அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தக்கூடாது என்ற கொள்கையை கொண்டிருப்பதாக ஐநா.சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.
ஐநா.பொதுசபையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக நடைபெற்ற மாநாட்டில் இந்தியா தனது பிரகடனத்தை தாக்கல் செய்துள்ளது.
அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான சர்வதேச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற உயர்மட்ட ஐநா.சபை கூட்டத்தில் பேசிய இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்கலா (Harsh Shringla) அணு ஆயுதங்களை கொண்டுள்ள நாடுகளுக்கு எதிராக தனது அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தக்கூடாது என்ற கொள்கையை இந்தியா கடைபிடிப்பதாக தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளிடம் ஒருபோதும் இந்தியா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தாது என்றும் ஷ்ரிங்கலா உறுதியளித்துள்ளார்.
Comments