6000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட குகை ஓவியங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பாராடைல் மலைப்பகுதியில் ஆய்வு செய்த குழுவினர் 572 ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றில் கங்காரு, கடல் பசு மற்றும் சிபிலிஸ் எனப்படும் மிகச்சிறிய எலி இனம் போன்றவை தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.
மாலிவாவா குகை ஓவியங்கள் எனப்படும் இந்தவகை ஓவியங்களை ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களான அபாரிஜின்கள் வரைந்ததாகவும், இவை சுமார் 6 ஆயிரம் முதல் 9 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
Comments