கர்த்தாபுர் குருதுவாராவுக்கான பாதையை மீண்டும் திறந்தது பாகிஸ்தான்
கர்த்தாபுர் குருதுவாராவுக்கான பாதையை மீண்டும் பாகிஸ்தான் அரசு திறந்துள்ளது.
இந்திய எல்லையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பாகிஸ்தானுக்குள் அமைந்துள்ள கர்த்தாபுர் பாதை கடந்த ஆண்டில் திறக்கப்பட்டது.
கொரோனா அச்சத்தால் இந்தியா பாதையை மூடிவிட்டதையடுத்து பாகிஸ்தானும் தனது பாதையை மூடியது. இந்தியா-பாகிஸ்தான் வாழ் சீக்கியர்களின் புனிதத் தலமாக உள்ள கர்த்தார்புர் குருதுவாரா கொரோனா அச்சத்தால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதையடுத்து மீண்டும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாதையை திறப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Comments