நான் நலமாக இருக்கிறேன் - டிரம்ப் வீடியோ வெளியானது

0 2899
அமெரிக்க அதிபர் டிரம்ப் தாம் நலமாக இருப்பதாக - வீடியோ வெளியீடு

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உடல்நலம் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிகுந்த கண்காணிப்புக்குட்பட்டது என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. ஆயினும் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் இருந்து டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோவில் தாம் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பாஸிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹெலிகாப்டர் மூலம் மேரிலாண்டில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மிகவும் உயர்மட்ட மருத்துவ நிபுணர்க்குழுவினர் டிரம்ப்பிற்கு சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளனர். ரெமிடிவிசர் உள்பட கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டன.

அவரது மற்ற உடல் உறுப்புகளில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிரம்பிற்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும் லேசாக காய்ச்சல் இருந்ததாகவும் தகவல் வெளியானது.

நேற்று முழுவதும் மிகுந்த கவனத்துடன் டிரம்பின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டதாகவும் அவருடைய உடல் நிலையில் அடுத்த 48 மணி நேரம் முக்கியமானது என்றும் வெள்ளை மாளிகை உயரதிகாரியான மார்க் மெடோஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த தகவல் தீயாய்ப் பரவிய நிலையில் மருத்துவமனையில் இருந்து டிரம்ப் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியது.

சுமார் 4 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ பதிவில் டிரம்ப் தமது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் தாம் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் வீடியோ வெளியானதையடுத்து தமது அறிவிப்பை திரும்பப் பெற்ற வெள்ளை மாளிகை அதிகாரி டிரம்ப் நலமாக இருப்பதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments