நவம்பர் 17-ல் தொடங்குகிறது ராமர் கோவில் கட்டுமானப் பணி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் வரும் நவராத்திரி பண்டிகை முதல் தொடங்கும் என்று ராமஜன்ம பூமி அறக்கட்டளையின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள மஹந்த் கமல் நாயஸ் தாஸ் அறிவித்துள்ளார்.
தூண்களின் பலத்தைப் பரிசோதிக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கோவிலின் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் சுமார் 1200 தூண்கள் பூமிக்கு அடியில் ஆழமாகப் பதிக்கப்பட உள்ளன.
அக்டோபர் 17ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரி கொண்டாட்டம் தொடங்குகிறது. இந்த விசேஷ தருணத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நவராத்திரி தொடக்கத்துடன் ராமர் கோவிலுக்கான அடித்தளமாக தூண்களை பதிக்கும் பணி தொடங்க உள்ளது என்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Comments