உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் ராகுல், பிரியங்கா காந்தி சந்திப்பு

0 5408
உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் ராகுல், பிரியங்கா காந்தி சந்திப்பு

உத்திரப்பிரதேசத்தில், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உயிரிழந்த 19 வயது இளம்பெண்ணின் குடும்பத்தினரை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதற்காக தலைநகர் டெல்லியிலிருந்து, ஹத்ராஸ் நோக்கிப் புறப்பட்டபோது, காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், ஏராளமான கார்களில் சென்றனர்.

ஆனால், நொய்டா அருகே, உத்திரப்பிரதேச எல்லையில், அனைவரையும் அனுமதிக்காத அம்மாநில போலீசார், பிரியங்கா, ராகுல் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கினர்.

இதையடுத்து, பிரியங்கா காந்தி, காரை ஓட்டிச் செல்ல, அவருடன், ராகுல் காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட 5 பேர் ஹத்ராஸ் சென்று, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments