ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது.
அவ்விரு அணிகளுக்கு இடையிலன ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது. பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.
ஆரோன் பிஞ்ச் 8 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து படிக்கல் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். படிக்கல் 37-வது பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விராட் கோலி 41 பந்தில் அரைசதம் அடித்தார். படிக்கல் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். விராட் கோலி 18-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாச, 19.1 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
Comments