இந்தியா, மியான்மர் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை!
இந்தியா, மியான்மர் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்திய ராணுவ தலைமைத் தளபதி நரவானே, வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் சிரிங்லா ஆகியோர் ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாட்களும் மியான்மரில் அந்நாட்டு அமைச்சர் ஆங் லைங், அரசின் ஆலோசகர் ஆங் சான் சூ கீ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அப்போது மியான்மரின் சிட்வி துறைமுகம், கலடான் ஆறு ஆகியவற்றின் வழியே மிசோரம் மாநிலத்துக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான உடன்பாடும், மியான்மர் எல்லையில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்கான உடன்பாடும் கையொப்பமாகும் எனக் கூறப்படுகிறது.
Comments