விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாகப் பிரதமர் மோடி பேச்சு
விவசாயிகளின் நலனுக்குத் தமது அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், முந்தைய அரசுகள் தேர்தல் ஆதாயம் கருதிச் செயல்பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் சோலங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் சுற்றுலா நடவடிக்கைகள் மீண்டும் வேகம்பெறத் தொடங்கியுள்ளன என்றார்.
குகைவழிப் பாதை திறக்கப்பட்டதால் இமாச்சலத்துக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார். வேளாண் துறைச் சட்டத் திருத்தங்களால் சிறு விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் மோடி குறிப்பிட்டார்.
Comments