தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, நிபந்தனை அடிப்படையில் மத்திய அரசு கடனுதவி
நிபந்தனைகளின் அடிப்படையில், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்குகிறது.
கொரோனா நெருக்கடியை சமாளிப்பதற்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், ஆர்இசி மற்றும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் ஆகிய இரு மத்திய நிறுவனங்களும் இந்த கடனை வழங்க உள்ளன. இரு மத்திய நிறுவனங்களும் கடன்தொகையில் 50 சதவீதத்தை முதல் தவணையில் வழங்கும். இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு முன்னதாக, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின்கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான மனுவை டான்ஜெட்கோ தாக்கல் செய்ய வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை ஆகும்.
அரசு அலுவலகங்களில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்துதல், மின்கட்டணங்களுக்கு டிஜிட்டல் பேமென்ட் முறை உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments