பிரதமரின் மேடை அருகே மயங்கி விழுந்த பாதுகாப்பு படை வீராங்கனை: உடனடியாக உதவுமாறு பிரதமர் மோடி உத்தரவு
இமாச்சலப் பிரதேசம் மணாலியில் பொதுக் கூட்டத்தில் மோடி பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த பாதுகாப்பு படை வீராங்கனைக்கு உதவுமாறு தனது மருத்துவக் குழுவினரை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர்கள் விரைந்து சென்று பாதுகாப்பு படை வீராங்கனைக்கு முதலுதவி அளித்தனர்.
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தொழிலாளர் சட்டங்கள் அண்மையில் சீர்திருத்தப்பட்டதை சுட்டிக்காட்டினார். சமுதாயத்திலும் அமைப்புகளிலும் அர்த்தமுள்ள மாற்றங்களை, சுயநல நோக்கங்களுக்காக எதிர்ப்பவர்கள் எதையும் தடுத்து நிறுத்த முடியாது என பிரதமர் குறிப்பிட்டார்.
#WATCH Himachal Pradesh: PM Narendra Modi asks his medical team to assist a woman security personnel who fell unwell while on duty at the public rally at Solang Nala in Manali.
— ANI (@ANI) October 3, 2020
PM said, "Please take her from there & make her sit. Ask our medical team to help her." pic.twitter.com/RgTltHViVq
Comments