அரசியல் காரணத்துக்காகவே ஹத்ராசுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா பயணம் - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

0 4369
அரசியல் காரணத்துக்காகவே ஹத்ராசுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா பயணம் -மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

அரசியல் காரணத்துக்காகவே உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செல்வதாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி,  காங்கிரஸின் தந்திரங்களை மக்கள் புரிந்து வைத்துள்ளனர் என்றும், அதனால்தான் 2019ம் ஆண்டு  தேர்தலில் பாஜக வரலாற்று வெற்றி பெறுவதை மக்கள் உறுதி செய்தனர் என்றும்  கூறினார்.

இதேபோல்  பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ராகுலும் பிரியங்காவும் ஹத்ராஸ் பயணம் மேற்கொள்ளவில்லை என்பதையும், மக்கள் புரிந்து வைத்துள்ளனர் என்றும் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments