நாடு முழுவதும் நாளை சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு... 72 நகரங்களில், 10 லட்சத்து 58 ஆயிரம் பேர் எழுதவுள்ளனர்
நாடு முழுவதும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இருகட்டங்களாக நாளை நடைபெறுகிறது.
72 நகரங்களில், 2,569 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 10 லட்சத்து 58 ஆயிரம் பேர் எழுதவுள்ளனர். காலை 9.30 மணி மற்றும் பகல் 2.30 மணி என்று இரு கட்டங்களாக தேர்வு நடைபெறும்.
தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்பு வரை மட்டுமே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றவும், ஹால்டிக்கெட் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை கட்டாயம் எடுத்துவரவும் UPSC அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, 60ஆயிரம் தேர்வர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு மையங்களை மாற்றியிருப்பதாக UPSC தெரிவித்துள்ளது.
UPSC to conduct All India Civil Service preliminary exam in Pondy on Oct 4#UPSCExam#Puducherry pic.twitter.com/W9HE6nE6vo
— United News of India (@uniindianews) October 3, 2020
Comments