பீகார் தேர்தலில் லோக்ஜனசக்தி கூட்டணியில் போட்டியா (அ) தனித்து போட்டியா ? - இன்று மாலை முடிவு

0 1727
பீகார் தேர்தலில் லோக்ஜனசக்தி கூட்டணியில் போட்டியா (அ) தனித்து போட்டியா ? - இன்று மாலை முடிவு

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில்  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜனசக்தி இன்று மாலை முடிவெடுக்கவுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் 36 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், 2 மேலவை இடங்களையும் லோக் ஜனசக்தி கேட்கிறது.

ஆனால் 20 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் விரும்பவில்லை. இதனால் லோக்ஜனசக்தி கட்சி அதிருப்தியில் உள்ளது.

இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும், கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தலைமையில் முக்கிய கூட்டம் நடைபெறுகிறது.

இதில் கூட்டணியில் சேர்ந்து போட்டியா, தனித்து போட்டியா என முடிவெடுக்கப்படவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments