பீகாரில் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய உள்ளதாகத் தகவல்
பீகாரில் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் காங்கிரஸ் 70 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதாதளம் 143 இடங்களிலும், இடதுசாரிக் கட்சிகள் 30 இடங்களிலும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 71 தொகுதிகளில் வியாழனன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 12ஆம் தேதி கடைசி நாள் என்பதால் அதற்குள் எந்தெந்தக் கட்சிக்கு எந்தெந்தத் தொகுதிகள் என்பது இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
Comments