"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
போதைப்பொருள் புகாரில் கைதான நடிகைகளின் தலைமுடி மாதிரிகள் உரிய முறையில் சேகரிக்கப்படவில்லை - மத்திய தடயவியல் ஆய்வகம்
போதைப்பொருள் புகாரில் கைதான கன்னட நடிகைகள் இருவரும், அளித்த தலைமுடி மாதிரிகள் உரிய முறையில் சேகரிக்கப்படவில்லை எனக் கூறி அவற்றை மத்திய தடயவியல் ஆய்வகம் திருப்பி அனுப்பியுள்ளது.
நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி உள்ளிட்ட மூவர் போதை பொருள் பயன்படுத்தியதை உறுதி செய்யும் வகையில், அவர்களது தலைமுடி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஐதராபாத்திலுள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த மாதிரிகள் உரிய முறையில் சேகரித்து, அனுப்பப்படவில்லை எனவும், மேலும் அவை தலையின் உரிய பகுதியிலிருந்து சேகரிக்கப்படவில்லை எனவும் கூறி திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இது கர்நாடக தடயவியல் துறையின் தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் எனவும், உள்நோக்கத்துடன் செய்யப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
Comments