சேசிங்கின்போது கடைசி 2 ஓவர்களில் ரன் எடுக்க முடியாதது ஏன் ? - தோனி விளக்கம்

0 12151
சேசிங்கின்போது கடைசி 2 ஓவர்களில் ரன் எடுக்க முடியாதது ஏன் ? - தோனி விளக்கம்

ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சேசிங்கின்போது கடைசி 2 ஓவரில் ரன் எடுக்க தடுமாறியது, இருமிக் கொண்டிருந்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி விளக்கமளித்துள்ளார்.

அப்போட்டியில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சென்னை அணி, 157 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. 47 ரன்களுடன் தோனி களத்தில் இருந்தபோதும் வெற்றி தேடித் தர இயலவில்லை.

பேட்டிங் செய்தபோது இருமிக் கொண்டிருந்ததுகுறித்து பேசிய தோனி, தொண்டை வரண்டு இருந்ததாகவும், இதனால் இருமல் வந்ததாகவும் குறிப்பிட்டார்.

முடிந்தவரை பந்தை மிகவும் வேகமாக அடிக்க முயற்சித்ததாகவும், எனினும் பல பந்துகளை பேட்டின் மைய பகுதியால் அடிக்க இயலவில்லை என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments