சீனாவில் தேசிய விடுமுறையை அடுத்து வெள்ளியன்று ஒரேநாளில் 10.8 கோடிப் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்

0 1523
சீனாவில் தேசிய விடுமுறையை அடுத்து வெள்ளியன்று ஒரேநாளில் 10.8 கோடிப் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்

சீனாவில் 8 நாட்கள் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளியன்று ஒரேநாளில் பத்துக் கோடியே 80 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள சீனாவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

அங்கு அக்டோபர் 1 தேசிய நாளாகக் கடைப்பிடிக்கப்படும் நிலையில் அதற்காகத் தொடர்ந்து 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டிப் பணிபுரியும் இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் வெள்ளியன்று மட்டும் சாலை வழியாகவும், ரயில், விமானப் போக்குவரத்திலும் மொத்தம் 10 கோடியே 80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments