கொரோனா சிகிச்சைக்கான ஸ்புட்னிக் 5 மருந்தை வெனிசுலாவுக்கு அனுப்பியுள்ள ரஷ்யா
கொரோனா சிகிச்சைக்கு கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் 5 மருந்தை வெனிசுலாவுக்கு ரஷ்யா அனுப்பியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெறும் நிலையில், ரஷ்யா முதல்முறையாக மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தது.
அந்த மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு இதுவரை ஒப்புதல் அளிக்காதபோதிலும், நட்பு நாடான வெனிசுலாவுக்கு தற்போது ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.
இதை பெற்றுக் கொண்ட வெனிசுலா, முதல்கட்டமாக அந்த மருந்தை கொண்டு 2 ஆயிரம் பேரிடம் பரிசோதனை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
Venezuela receives shipment of Russian Sputnik-V coronavirus vaccine https://t.co/L9kg8Wej7x pic.twitter.com/nqG0g5V6Fe
— Reuters (@Reuters) October 2, 2020
Comments