பராகுவே வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால் தேசிய அவசரநிலை பிறப்பிப்பு
பராகுவே நாட்டில் வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாததால் அங்கு தேசிய அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள சாக்கோ பகுதியில் பற்றி எரியும் தீயால் வனத்தில் உள்ள மரங்கள், பழங்குடியினர் வீடுகள் மற்றும் விலங்குகளின் உறைவிடங்கள் ஆகியவை எரிந்து போய் விட்டன.
இதனை அடுத்து தீயை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக கூடுதல் நிதி ஒதுக்க முடியும் என்றும் சர்வதேச அளவில் உதவியை கோர முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தீயை அணைக்கும் பணியில் இரண்டு தீயணைப்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments