பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி : நடால், டொமினிக் தீம் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

0 1181
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி : நடால், டொமினிக் தீம் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

பாரிசில் நடைபெறும் தொடரின் 3வது சுற்றில், நடப்பு சாம்பியன் ரபெல் நடால் 6-1, 6-4, 6-0 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் ஸ்டீபனோ டிராவாக்லியாவை வீழ்த்தினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், 6-4, 6-3, 6-1 என்ற நேர்செட்டில் நார்வே இளம் வீரர் காஸ்பர் ரூட்டை தோற்கடித்து தொடர்ந்து 5-வது முறையாக 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மகளிர் பிரிவில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப், 6-0, 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவை, வெறும் 54 நிமிடங்களில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments